வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர், பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

322

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர், பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் அந்தமானுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக காரைக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோன்று, கடலூர், நாகை துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கவேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.