முதுமலை காட்டிலிருந்து வண்டலூருக்கு 4 வயது குட்டி யானை வருகை..!

282

முதுமலை காட்டிலிருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்பட்ட நாலு வயது யானைக் குட்டியை பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஏராளமான சிறுவர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி வந்து செல்கின்றனர். இந்த பூங்காவுக்கு முதுமலை காட்டிலிருந்து தாயால் தனித்து விடப்பட்ட 4 வயதுடைய ரோகிணி என்ற புதிய பெண் யானைக் குட்டி வருகை தந்துள்ளது. இந்த குட்டி யானையை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த யானைக் குட்டியின் சேட்டைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.