வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்களை பிடிக்க காவல்துறை சார்பில் தமிழக, கேரள எல்லையில் மாவோயிட்டுகளின் புகைப்படங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

306

வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்களை பிடிக்க காவல்துறை சார்பில் தமிழக, கேரள எல்லையில் மாவோயிட்டுகளின் புகைப்படங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வனப்பகுதியில் பழங்குடியினர்கள் வசிக்கும் கிராமங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவோயிட்டுகள் புகைப்படங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர்கள் காவல்துறையினரின் சார்பில் தமிழக, கேரள எல்லையில் வைக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.