வால்பாறை அருகே சாலையில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

385

வால்பாறை அருகே சாலையில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணியர் சுவாமி கோயில் அருகே அண்ணா திடல் அமைந்துள்ளது. அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென்று சாய்ந்து விழுந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 5-ம் வகுப்புப் படிக்கும் பதினோரு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாலையில் உள்ள பழைய மரங்களை அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.