கல்லூரி மாணவி வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதம்!

407

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவி வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கல்லூரி மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமான தகவல்களை அளித்துவரும் சிறைத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், தன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.