முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் கட்சி சிறப்பாக உள்ளது – அமைச்சர் வளர்மதி

485

திருச்சியில் 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக விலைக்கு வாங்குவதாக எழுந்துள்ள புகாருக்கு பதிலளித்த அவர், அந்தத் தகவல் தவறானது என்றும் அதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர் யாருமில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். தேர்தலில் வெற்றி, தோல்வி நிகழும்போது இதுபோன்ற குரல்கள் எழுவது சகஜம் என்றும் தெரிவித்த வெல்லமண்டி நடராஜன், தோல்வியைக் கண்டு அதிமுக அஞ்சாது என்றார்.