மாணவி வளர்மதி நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு..!

593

காவலரை தாக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னையில், கடந்த 23ம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மாணவி வளர்மதி நிதி திரட்டினார். அப்போது காவலரை தாக்கியதாக வளர்மதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து மாணவி வளர்மதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் மீது, ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். சிறையில் தன்னை தாக்கிய காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.