வழக்கு விசாரணையை முடித்துவைக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர்.

188

வழக்கு விசாரணையை முடித்துவைக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர்.
வேலூர் மாவட்டம் திருபத்தூர் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உதயகுமார். இதனிடையே, ஆத்தூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும், பேராம்பட்டு பகுதியை சேர்ந்த வரதராஜுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை உதவி ஆய்வாளர் உதயகுமார் விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கை முடித்துவைக்க கிருஷ்ணகுமாரிடம் 5 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரையடுத்து, உதவி ஆய்வாளர் உதயகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.