வாக்காளர் சிறப்பு திருத்தத்தை தொடர்ந்து தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடப்படுகிறது.

299

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை தொடர்ந்து தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்படுவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டு, 30-ந் தேதி வரை திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து விண்ணப்பங்களின் உண்மை தன்மை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பங்களை ஏற்கப்பட்டு அவை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.
அதனடிப்படையில் தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10.22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.
இதில் ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி பேர்; பெண் வாக்காளர்கள் 2.99 கோடி பேர்;
மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5 ஆயிரத்து 40 பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 10ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.