வாஜ்பாய் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு..!

158

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாஜ்பாய் உடலுக்கு பாஜக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னர் அவரது இறுதி ஊர்வலம் மதியம் தொடங்கப்பட்டு மாலை 5 மணியளவில் டெல்லி விஜய்காட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க ஒன்றரை ஏக்கர் நிலத்தை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.