வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளது – எய்மஸ் மருத்துவமனை

191

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்று முந்தினம் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அட்வானி உள்ளிட்ட தலைவர்கள் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனிடையே அவரது அவரது உடல்நிலை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம், உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுவதாகவும், நோய் தொற்று கட்டுப்படும் வரை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவித்துள்ளது.