வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி..!

328

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு தமிழகம் முழுவதும் பாஜக, மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பகோணம் மகாமககுளம் அருகே உள்ள வீரசைவ மடம் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து வாஜ்பாயின் அஸ்திக்கு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கே வாஜ்பாய் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது. இதையடுத்து வாஜ்பாயின் அஸ்தி இன்று திருவாரூர் வந்தடைகிறது.

இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பாலக்கரையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கமம் கடற்கரையில் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் புகழை நினைவு கூரும் வகையில் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.