வாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை..!

560

புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்காக, எடுத்து வரப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், கமலக்கண்ணன் ஆகியோர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தேசிய கயிறு வாரிய துணை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், வாஜ்பாய் அஸ்தி சேலம் மாவட்டம் வந்தடைந்தது. அதற்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பல்வேறு அரசியல் கட்சியினர், ஆன்மீக பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.