வாஜ்பாய்-க்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் : அனைத்துக்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்பு

119

சென்னையில் இன்று நடைபெறும் வாஜ்பாய் புகழஞ்சலி கூட்டத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை எழும்பூரில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி கூட்டம் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக எம்பி கனிமொழி உட்பட மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தின் நிறைவாக பாஜக மூத்த தலைவர், இல.கணேசன் உரையாற்றுகிறார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.