உரிமைக்காக போராடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக பாய்கிறது – கவிஞர் வைரமுத்து

199

உரிமைக்காக போராடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக பாய்வதாக, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, கூட்டு குடும்பம் இல்லாததால், இளம் தலைமுறையினரிடையே பொறுமையும், சகிப்புத்தன்மையும் குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்தார். சட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே, சமூக போராளியின் குரலாக உள்ளது என குறிப்பிட்ட அவர், உரிமைக்காக போராடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக பாய்வதாகவும் கூறினார்.