மூன்று காரணங்களுக்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்-கவிஞர் வைரமுத்து!

423

மூன்று காரணங்களுக்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி எழுதிய சிந்தனை களஞ்சியம் என்னும் புத்தகத்தின் தமிழ் பிரதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ரூபா பதிப்பகத்தை சேர்ந்த ராஜலட்சுமி தமிழாக்கம் செய்த சிந்தனை களஞ்சியம் புத்தகத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட அதனை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். இதனையடுத்து பேசிய கவிஞர் வைரமுத்து திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது உள்ளிட்ட மூன்று காரணங்களுக்காக பிரதமர் மோடியை பாராட்டினார்.