வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் ….

308

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அத்துடன் கடந்த ஒரு வாரமாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.