விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் : வைகோ

280

டெல்லியில் அறவழியில் போராடும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க, தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் அறவழி போராட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக தெரிவித்தார். விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணத்தை தரவேண்டும்,காவிரி நதி நீரை இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 14 நாட்கள் அவர்கள் போராடி வருவதை சுட்டிக்காட்டிய வைகோ, இதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.