ஆளுநரிடம் மனு அளித்தது உண்மையென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

329

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தின் சமூக நீதிக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே மனு கொடுத்தது உண்மை என்றால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் வைகோ கூறினார்.