திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.

441

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த வாரம் உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்தநிலையில், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை சந்தித்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். கருணாநிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து வைகோ கேட்டறிந்தார்.
2015-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ சந்தித்தார். இரண்டரை ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து இருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.