செப்டம்பர் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு அனைவரும் வருமாறு வைகோ அழைப்பு..!

445

செப்டம்பர் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு அனைவரும் வருமாறு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள்விழா மாநாடு செப்டம்பர் 15ம் தேதி தஞ்சை தரணியில் சீரும் சிறப்புடனும் நடைபெற இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் லட்சியங்களுக்கு தற்போது பெரும் சவால் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டிற்கே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை என்றும் வைகோ கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா வழியில் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க வலிமையான குரல் ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்,, அதற்கு தஞ்சை மாநாடு அடித்தளமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைவரும் குடும்பம் குடும்பமாகவும், இளைஞர்களும் மாணவர்களும் அணி அணியாகவும் திரண்டு வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.