சுதந்திர தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தி நீதி வழங்க வேண்டும்- மதிமுக பொது செயலாளர் வைகோ!

347

சுதந்திர தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தி நீதி வழங்க வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்த காலத்தில் 2009 -ம் ஆண்டு, மிகக் கோரமான இனப் படுகொலையை நடத்தியதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத ஏந்தாத ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்ததையும் வைகோ நினைவு கூர்ந்துள்ளார்.
இன்றைக்கும் தமிழ் ஈழம் சிங்கள ராணுவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிங்கள குடியேற்றங்கள் பலவந்த படுத்துவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போரில் காணாமல் போனவர்களின் கதி இன்று வரை அறியப்படாமல் உள்ளதாக வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் படுகொலையை மனித உரிமைகள் ஆணையம் ஐ.நா பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்களர்களோடு,ஈழத்தமிழர்கள் வாழ இனி சாத்தியம் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ள வைகோ, பொதுவாக்கெடுப்பு நடத்துவதே நீதி கிடைக்க ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.