ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு.

352

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவா சென்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இலங்கை இறுதி போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவா சென்றார். அவருக்கு ஜெனிவாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து, இன்று தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார். அப்போது, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து அவர் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.