ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு : மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிவிப்பு ..!

346

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். திராவிட இயக்கத்தை அழிக்க துடிக்கும் பாஜக வை எதிர்க்க மதவாதத்திற்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்வது அவசியம் என கூறிய வைகோ, தமிழர்களின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக – மதிமுக இடையே நல்லிணக்கமான சூழல் ஏற்பட்டு வருவதன் தொடக்கபுள்ளியாக இதை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக வுக்கு மதிமுக ஆதரவளித்துள்ளது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.