ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு – வைகோ!

347
chennai

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். திராவிட இயக்கத்தை அழிக்க துடிக்கும் பாஜக வை எதிர்க்க மதவாதத்திற்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்வது அவசியம் என கூறிய வைகோ, தமிழர்களின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக – மதிமுக இடையே நல்லிணக்கமான சூழல் ஏற்பட்டு வருவதன் தொடக்கபுள்ளியாக இதை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக வுக்கு மதிமுக ஆதரவளித்துள்ளது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.