முழு அடைப்பு போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு..!

341

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தும், முழு அடைப்பு போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களை வாட்டி வதைப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10ம் தேதி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மதிமுக ஆதரவளிப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களும், அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும் ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டுமெனவும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.