ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியதன் மூலம் உலகின் கவனம் தமிழகத்தை நோக்கி திரும்பியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகே புகழாரம் சூட்டியுள்ளார்.

155

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கொளுத்தும் வெயில், நடுங்கும் குளிர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை மெரினாவில் கூடிய மாணவர்கள், வாடிவாசல் திறக்காவிட்டால் வீடு வாசலுக்க செல்லமாட்டோம் என முழங்கியது தமிழர்களுக்கு பெருமை சேர்த்தாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற அறப்போராட்டம் இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை என்று கூறியுள்ள வைகோ,
ஜல்லிக்கட்டை பாதுகாக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்த மாணவர் சமுதாயத்திற்கு தன் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.