மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் – வைகோ

339

தமிழகத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராம்நாத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் குறித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் குப்பை தொட்டியில் போடப்பட்டிருப்பதாக கூறினார். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக வெளியிடப்பட்டிற்கும் அரசாணை நிலைத்து நிற்காது என சுட்டிக் காட்டிய வைகோ, உடனடியாக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே தமிழகத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராம்நாத்திற்கு அவர் பதிலடிக் கொடுத்துள்ளார்.