நொறுங்கிப்போன இதயத்தோடு, யாரும் தீக்குளிக்க வேண்டாம் என வைகோ வேண்டுகோள் ..!

951

நொறுங்கிப்போன இதயத்தோடு, யாரும் தீக்குளிக்க வேண்டாம் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகரில் தனது மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தீக்குளித்த சரவண சுரேஷ் உயிர் ஊசலாடும் செய்தியை அறிந்த மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நான் மிக மிக நேசித்த சரவண சுரேஷின் முடிவு, உச்சந்தலையில் இடி விழுந்ததை போல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். என் துணைவியாருக்கும் , உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் சொல்ல முடியும் என வைகோ உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று மீண்டும் கரம் கூப்பி வேண்டுவதாகவும் வைகோ அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.