மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்- வைகோ!

293

ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நீராதாரமாக திகழும் முக்கிய ஆறுகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டதால் ஆற்று வளம் அடியோடு அழிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மணல் எடுக்க தடை உள்ளதால், தமிழக ஆறுகளில் எடுக்கப்படும் மணல் அம்மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
எனவே, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் நிறுவனம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
மணல் கொள்ளையால் ஆறுகள் முற்றிலும் சீரழிந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.