கோவில்பட்டியில் பயிர்காப்பீட்டு தொகையை வழங்கக் கோரி மதிமுக ஆர்ப்பாட்டம்!

279

மத்திய அரசை எதிர்க்கும் திறன் இன்றி தமிழக அரசு வலுவிழந்து இருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
பயிர்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க கோரி கோவில்பட்டியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை மத்திய மாநில அரசுகள் ஒடுக்கி விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.