மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது : வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

236

மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால், இந்தியாவுக்கு நாலாபுறங்களில் இருந்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில், ம.தி.மு.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்திய அரசு தமிழகத்தை பல விதங்களில் வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை, தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனவும் இதற்கு மக்கள் துணையிருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.