தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும் : வைகோ வேண்டுகோள்

381

தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜெனீவா கூட்டத்தில் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், உலகமெங்கும் உள்ள தேசிய இனங்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர நாடுகள் ஆகிவிட்டன என்றார். மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு, வைகோ வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். இதில் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுனார். ஐ.நா மன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்றும் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.