துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை மக்களை ஏமாற்றும் செயல் – வைகோ குற்றச்சாட்டு

288

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை மக்களை ஏமாற்றும் செயல் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ட்ரெர்லைட் ஆலையை மூடுவது குறித்து, தமிழக அரசு அமைச்சரவை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், 27 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு மூலம் விரைவில் அறிக்கை வெளிவரும் என கூறிய வைகோ, தமிழக அரசு அமைத்துள்ள தனிநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என சாடினார். கல்வியில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், நீட் தேர்வால் கடைசி இடத்தை பிடித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.