இந்திய அரசின் மதவெறிப் போக்குக்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்படுவதா? – வைகோ

319

மாணவி சோபியா மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பா.ஜ.கவுக்கு எதிராக மாணவி சோபியா கருத்து தெரிவித்திருப்பது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசின் மதவெறிப் போக்குக்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்படுவதா என கேள்வி எழுப்பிய வைகோ, இது ஜனநாயக விரோத செயல் என்றும் கண்டித்துள்ளார்.

நீதிமன்றம் சோபியாவை பிணையில் விடுதலை செய்துள்ள நிலையில், அவரது பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிப்பதும், கிரிமனல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அநீதி இழைக்கும் செயல் என்றும் சாடியுள்ளார்.இதனால் தமிழக அரசு மாணவி சோபியா மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.