திமுக உறுதியான தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக உள்ளது – வைகோ

156

திமுக உறுதியான தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக இருக்கிறது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு சிலர் கற்பனையாக சொல்வதை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்த வேண்டும் என்றார். மூத்த தலைவர்களின் மறைவு காலப்போக்கில் நடைபெறும் ஒன்று என சுட்டிக் காட்டிய வைகோ, தலைவர்கள் விட்டுச்சென்ற பணியை அடுத்தடுத்து வருபவர்கள் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்தநிலையில், திமுக உறுதியான தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.