மக்களின் நலனுக்காக போராடும் நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் போக்கும் தமிழகத்தில் தொடர்பவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்..

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய முகிலனை தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திட்டமிடப்படுவதாக கூறினார். மக்களின் நலனுக்காக போராடுபவர்களை நாதியற்றவர்களாக கருத கூடாது என கூறிய வைகோ, தமிழகத்தில் கொடூர பாசிச ஆட்சி நடப்பதாக கடுமையாக விமர்சித்தார். மேலும் பொய் வழக்குகளை போடுவதை அரசு நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.