ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வராதது ஏன் : வைகோ

152

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வராதது ஏன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பீட்டா அமைப்பும், விலங்குகள் நல வாரியமும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டு வரும் நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர உத்தரவாதம் இல்லை என்பதால், தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டத்தைத் தொடர்வது நியாயம் என்றும் வைகோ கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசை அவசர சட்டம் இயற்ற சொன்ன பிரதமர் மோடி, ஏன் மத்திய அரசு கொண்டு வரநடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.