இலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..!

140

இலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என ராஜியசபா எமபி வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் வைகோவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, கடந்த 2006ஆம் ஆண்டு திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜரானார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, புலிகள் ஆதரவு பேச்சுக்காக எந்த தண்டனை கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பதாகக் கூறினார், ஆனால், இலங்கையில் இனப்படுகொலை செய்தவர்கள் ராஜபக்சே உட்பட யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.