தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான முடிவுக்கு வைகோ கண்டனம்

231

தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைகோ தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகைபுரிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலினை சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவிக்க வந்ததாக கூறினார். வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான முடிவு என வைகோ குற்றம் சாட்டினார்.