வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு 4 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் மக்கள் மகிழ்ச்சி!

817

மதுரை வைகை ஆற்றில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதி கடும் மழை பெய்ததால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், வைகை, முல்லை பெரியார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மதுரையில் குடிநீர் பிரச்சினை தீரும் என்று பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.