முதல் போக பாசனத்துக்காக வைகை அணை திறப்பு..!

224

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி, சேடபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், முதல் போக நெல் சாகுபடிக்காக, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், வைகை அணையை இன்று திறந்து வைத்தனர். இதனால், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் அனைத்தும், பாசன வசதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.