வைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

167

வைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பயன்பெற்று வரும் நிலையில், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் தொடர்ந்து மாசடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனுதாரரின் புகார் தொடர்பாக பதிலளிக்கும்படி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.