வடலூர் சத்திய ஞான சபையில், நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

177

வடலூர் சத்திய ஞான சபையில், நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில்,146-வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, ஏழு திரைகள் நீங்கி, ஆறு காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்பட்டன. அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை” என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் ஒரு மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும். பின்னர் இரவு 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இத்தரிசனத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதற்கென 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜோதி தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.