வடகொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

214

வடகொரியா, நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நடுத்தர ஏவுகணைகளை சோதனை செய்தது. அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையின்போது, ஒரு ஏவுகணை 150 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து கடலில் விழுந்தது. இதையடுத்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை பாய்ந்து, பின்னர் செங்குத்தாக ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கைத் தாக்கியது.

வடகொரியா வெற்றிகண்ட இந்த ஏவுகணை சோதனை குறித்து, தென்கொரியாவுடன் அமெரிக்கா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர்மட்டக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாக தென்கொரிய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

வடகொரியா நடப்பாண்டில் மேற்கொண்ட 4 ஏவுகணை சோதனை தோல்வியடைந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.