வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனைக்கு தயாராகி வருவதால் அத்துமீறும் ஏவுகணைகளை கண்டவுடன் சுட்டு வீழ்த்தும்படி ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

264

வடகொரியா, கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து அணு ஆயுத சோதனைகளை 3 முறை வடகொரியா தொடர்ந்து நடத்தியது. இதில் அணுகுண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதனால்
வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. ஆனாலும் தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை பரிசோதனைக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை மூலம் ஜப்பானுக்கு தெரியவந்துள்ளது. எனவே அத்துமீறும் ஏவுகணைகளை கண்டவுடன் சுட்டு வீழ்த்தும்படி ஜப்பான் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெயியாகி உள்ளன.