அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மட்டும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

323

ஆந்திர கடலோரத்தை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 சென்டி மீட்டர் மழையும், ஒசூரில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.