கொடைக்கானலில் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி !

339

கொடைக்கானலில் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கன மழை பெய்தது. நகரம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்