அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை மையம்

268

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும். சென்னையை பொறுத்த வரை மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில், அதிகபட்சமாக 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது எனக்கூறினார்.