சங்கரன்கோவில் அருகே ஏற்பட்ட சூறைக்காற்றால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதமாகின.

217

சங்கரன்கோவில் அருகே ஏற்பட்ட சூறைக்காற்றால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதமாகின.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிசல்குளத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வாழை மரங்கள் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்தநிலையில், அப்பகுதியில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால், வாழை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.